திங்கள், 22 டிசம்பர், 2014

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஞாயிறு நற்சிந்தனை

திருவருகை காலம்-நான்காம் வாரம், ஞாயிறு 
முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16

சனி, 20 டிசம்பர், 2014

வெள்ளி, 19 டிசம்பர், 2014

வியாழன், 18 டிசம்பர், 2014

இன்றைய வாசகம்.

முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 5-8

புதன், 17 டிசம்பர், 2014

செவ்வாய், 16 டிசம்பர், 2014

இன்றைய வாசகம்.

முதல் வாசகம்

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 1-2,9-13

திங்கள், 15 டிசம்பர், 2014

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சனி, 13 டிசம்பர், 2014

ஏழு நவீன பாவங்கள்

ஏழு நவீன பாவங்கள்
திருச்சபையின் நீண்ட ஆன்மீக வரலாற்றின் அனுபவத்திலிருந்து பாவங்கள் அனைத்திலும் தலையான பாவங்களாக ஆணவம், பேராசை, பொறாமை, கோபம், மோகம், போசனப்பிரியம், சோம்பல் என்னும் ஏழு பாவங்களைப் பட்டியல் இட்டுத்தந்திருக்கின்றது. கடந்த 1500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஏழு தலையான பாவங்கள் நம் ஆன்ம ஆய்வுக்கும், பாவ அறிக்கைக்கும் பயன்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டு புதியதாக இன்னும் ஏழு பாவங்களை நவீன பாவங்களாக வத்திக்கான் அறிவித்தது. உலக மயமாக்கலின் விளைவாக புதிய சமூகப் பாவங்கள் தோன்றியுள்ளன. எனினும், இந்தப் பாவங்கள் குறித்தும் உலகின் மனச்சான்றைத் தட்டி எழுப்பும் பணியைத் திருச்சபை தொடர்ந்து ஆற்றவேண்டும் என்றும் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார். இதோ அந்த ஏழு நவீன பாவங்கள்.

இன்றைய வாசகம்.

முதல் வாசகம் 
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

வெள்ளி, 12 டிசம்பர், 2014

வியாழன், 11 டிசம்பர், 2014

புதன், 10 டிசம்பர், 2014

செவ்வாய், 9 டிசம்பர், 2014

திங்கள், 8 டிசம்பர், 2014

இன்றைய வாசகம்

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா
 முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

ஞாயிறு நற்சிந்தனை

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் ஞாயிறு

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11

சனி, 6 டிசம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21,23-26

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வியாழன், 4 டிசம்பர், 2014

புதன், 3 டிசம்பர், 2014

இன்றைய வாசகம்

டிசம்பர் 3
புனித பிரான்சி சவேரியார் - மறைப்பணியாளர்
இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா

முதல் வாசகம்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3

செவ்வாய், 2 டிசம்பர், 2014

திங்கள், 1 டிசம்பர், 2014

ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஞாயிறு நற்சிந்தனை

திருவருகை காலம் முதல் ஞாயிறு

முதல் வாசகம்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16-17; 64: 1,3-8

சனி, 29 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

 ஆண்டின் பொதுக்காலம் 33 சனி
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 4-12

வெள்ளி, 28 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

 ஆண்டின் 34ஆம் வாரம்வெள்ளி
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 20: 1-4,11 - 21: 2

வியாழன், 27 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

 ஆண்டின் 34ஆம் வாரம்வியாழன்
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3,9

புதன், 26 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

ஆண்டின் 34ஆம் வாரம்புதன் 
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4

செவ்வாய், 25 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

 ஆண்டின் 34ஆம் வாரம் செவ்வாய்
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 14-20

திங்கள், 24 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

ஆண்டின் 34ஆம் வாரம் திங்கள் 
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 1-5

ஞாயிறு, 23 நவம்பர், 2014

ஞாயிறு நற்சிந்தனை

இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்

முதல் வாசகம்
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17

சனி, 22 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

 ஆண்டின் பொதுக்காலம் 33 சனி

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 4-12

வெள்ளி, 21 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

 ஆண்டின் பொதுக்காலம் 33 வெள்ளி

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 10: 8-11

வியாழன், 20 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

ஆண்டின் பொதுக்காலம் 33 வியாழன்
 
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 1-10


புதன், 19 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 4: 1-11


செவ்வாய், 18 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

ஆண்டின் பொதுக்காலம் 33 செவ்வாய் 
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 3: 1-6, 14-22

திங்கள், 17 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 1-4; 2: 1-5

ஞாயிறு, 16 நவம்பர், 2014

ஞாயிறு நற்சிந்தனை

ஆண்டின் பொதுக்காலம் 33 ஆம் வாரம் ஞாயிறு

முதல் வாசகம்

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

சனி, 15 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

ஆண்டின் பொதுக்காலம் 32 வாரம் சனி 
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய மூன்றாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5-8

வெள்ளி, 14 நவம்பர், 2014

விவிலிய குறுக்கெழுத்துப் போட்டி - நவம்பர் 2014



புனித பதுவை அந்தோனியார் ஆலயம்
,uhry;ifkh jkpo; fj;Njhypf;f FO tptpypa FUf;nfOj;Jg; Nghl;b- etk;gh;-2014

இன்றைய வாசகம்

ஆண்டின் பொதுக்காலம் 32 வெள்ளி 
 முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1:4-9

வியாழன், 13 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

ஆண்டின் பொதுக்காலம் 32 வியாழன் 

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7-20

புதன், 12 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் வாரம் புதன் 

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-7

செவ்வாய், 11 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8,11-14

திங்கள், 10 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-9

ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஞாயிறு நற்சிந்தனை

உரோமை புனித யோவான் லேட்ரன் பேராலய அற்பணிப்பு விழா

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2,8-9,12

சனி, 8 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்:
தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:10-19

வெள்ளி, 7 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்:
தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:17-4:1

வியாழன், 6 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்:
தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:3-8

புதன், 5 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-18

செவ்வாய், 4 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்
 திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:5-11

திங்கள், 3 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-4

ஞாயிறு, 2 நவம்பர், 2014

திரைப்படம் - இறைவனின் படைப்பு

இறைவனின் படைப்பு பற்றி குழந்தைகளுக்கான ஒரு கார்ட்டூன் திரைப்படம். அனைவரும் கண்டுகளியுங்கள்.

ஞாயிறு நற்சிந்தனை

சகல ஆத்துமாக்கள் திருநாள்

முதல் வாசகம்
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 1-9

சனி, 1 நவம்பர், 2014

இன்றைய வாசகம்

அனைத்துப் புனிதர்கள் பெருவிழா
முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14 

வெள்ளி, 31 அக்டோபர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11

வியாழன், 30 அக்டோபர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20

புதன், 29 அக்டோபர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-9

செவ்வாய், 28 அக்டோபர், 2014

இன்றைய வாசகம்

அப்போஸ்தலர்களான புனித சீமோன், யூதா பெருவிழா
முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22

திங்கள், 27 அக்டோபர், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 32 - 5: 8

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

ஞாயிறு நற்சிந்தனை

26-10-2014  ஞாயிறு 
முதல் வாசகம்

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22: 21-27 

திங்கள், 9 ஜூன், 2014

ஞாயிறு, 8 ஜூன், 2014

சனி, 7 ஜூன், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 16-20. 30-31

வெள்ளி, 6 ஜூன், 2014

வியாழன், 5 ஜூன், 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 30; 23: 6-11

புதன், 4 ஜூன், 2014

செவ்வாய், 3 ஜூன், 2014

திங்கள், 2 ஜூன், 2014

ஞாயிறு, 1 ஜூன், 2014

சனி, 17 மே, 2014

வெள்ளி, 16 மே, 2014

வியாழன், 15 மே, 2014

புனித பிலோமினா (வீர மங்கையின் வரலாறு)

கத்தோலிக்க கிறிஸ்தவ உலகில் பல புனிதர்கள் உள்ளனர். புனிதர்கள் என்றால் இவ்வுலக வாழ்வை புனிதமாக வாழ்ந்து இறைபதம் அடைந்து மக்களுக்கு தமது பரிந்துரைகள் மூலம் இறைவனிடம் அருளை பெற்று கொடுப்பவர்கள். அந்த வரிசையில் பிலோமினாவும் ஒரு புனிதரே.. வரலாற்று துறை பாடத்தில் கிறிஸ்தவ நாகரீகத்தை கற்போர் நிச்சயம் இவரது வரலாற்றை கடந்தே ஆக வேண்டும்.

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 13-25

புதன், 14 மே, 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 15-17, 20-26

செவ்வாய், 13 மே, 2014

திங்கள், 12 மே, 2014

ஞாயிறு, 11 மே, 2014

சனி, 10 மே, 2014

வெள்ளி, 9 மே, 2014

வியாழன், 8 மே, 2014

புதன், 7 மே, 2014

செவ்வாய், 6 மே, 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51 - 8: 1

திங்கள், 5 மே, 2014

ஞாயிறு, 4 மே, 2014

சனி, 3 மே, 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

வெள்ளி, 2 மே, 2014

வியாழன், 1 மே, 2014

இன்றைய வாசகம்

முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 26 - 2: 3
கடவுள், ``மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்'' என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, ``பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்'' என்றார். அப்பொழுது கடவுள், ``மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்'' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58
அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், ``எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், ``தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

புதன், 30 ஏப்ரல், 2014

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

திங்கள், 28 ஏப்ரல், 2014

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

சனி, 26 ஏப்ரல், 2014

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

வியாழன், 24 ஏப்ரல், 2014

புதன், 23 ஏப்ரல், 2014

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

திங்கள், 21 ஏப்ரல், 2014

சனி, 19 ஏப்ரல், 2014

இயேசுவின் பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலி

தொடக்க நூலிலிருந்து வாசகம்:
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு "விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "புற்ப+ண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்ப+ண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி "பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
 
தியானப் பாடல்: திருப்பாடல் 104:1-2, 5-6, 10, 12, 13-14, 24-25
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
நீவீர் ப+வுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும்; அசைவுறாது.
அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;
நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் ப+வுலகம் நிறைவடைகின்றது.
கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்; இதனால் ப+வுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! ப+வுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
பாவிகள் ப+வுலகினின்று ஒழிந்து போவார்களாக! தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக! என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா!
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
 
வாசகத்திற்குப் பின் மன்றாட்டு:
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய படைப்புகளையெல்லாம்
நீர் வியப்புக்குரிய வகையில் செம்மைப்படுத்துகின்றீர்.
தொடக்கத்தில் நீர் உலகத்தைப் படைத்தது மாபெரும் செயலே.
ஆனால் காலம் நிறைவுற்றபோது எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்துவின் பலியால்
இந்த உலகை மீட்டுப் புதியதொரு படைப்பாக உருவாக்கினீர் என்பது
அதைவிட மாபெரும் செயலாகும். இவற்றை உம் மக்கள் நாங்கள் உய்த்துணரச் செய்தருளும்.
என்றென்றும் வாழ்த்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
அல்லது (மனித படைப்பைக் குறித்து)
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவா, மனிதரை வியத்தகு முறையில் படைத்து, அதிலும் வயித்தகு முறையில் மீட்டருளினீர்:
நாங்கள் மெய்யறிவுடன் பாவ நாட்டங்களை உறுதியாய் எதிர்த்து நின்று,
முடிவில்லாப் பேரின்பத்தை அடையுமாறு அருள்புரிவீராக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்
எல். ஆமென்
--------------------------------------
இரண்டாம் வாசகம்: ஆபிரகாமின் பலி: தொடக்க நூல் 22:1-18

தொடக்க நூலிலிருந்து வாசகம்:
இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் "இதோ! அடியேன்" என்றார். அவர், "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்" என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, "நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவனிடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்" என்றார். பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, "அப்பா!" என, அவர், "என்ன? மகனே!" என்று கேட்டார். அதற்கு அவன், "இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், "எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" "என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர். ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று "ஆபிரகாம்! ஆபிரகாம்" என்று கூப்பிட, அவர் "இதோ! அடியேன்" என்றார். அவர், "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யாவேயிரே" என்று பெயரிட்டார். ஆதலால்தான் "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்று இன்றுவரை வழங்கி வருகிறது. ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, ";ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
 
தியானப் பாடல்: திருப்பாடல் 16:5,8 9-10, 11
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
வாசகத்திற்குப் பின் மன்றாட்டு:
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவா, விசுவாசிகளின் உன்னத தந்தையே,
எல்லா நாட்டு மக்களுக்கும் தந்தையாவீர் என்று உம் ஊழியர் ஆபிரகாமுக்கு வாக்களித்தீர்.
பாஸ்கா நிகழ்ச்சியாகிய கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு வழியாக அவ்வாக்குறதியை நிறைவேற்றினீர்.
இவ்வாறு உலகெங்கும் உமது அருளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் தொகையைப் பெருகச் செய்கின்றீர்.
இந்த உமது அருட்செயலை இன்று நினைவுகூரும் நாங்கள்,
அருள்வாழ்வில் முன்னேற நீர் விடுக்கும் அழைப்பினை
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் துணைபுரியும்.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
----------------------------------
மூன்றாம் வாசகம்: செங்கடலைக் கடந்து செல்லல்: யாத் 14:15-15:1

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்:
ஆண்டவர் மோசேயை நோக்கி, "ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிiவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, "நானே ஆண்டவர்" என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்" என்றார். இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை. மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், "இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்" என்றனர். ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர். அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு; ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
 
தியானப் பாடல்: விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18

பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;
ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;
போரில் வல்லவர் ஆண்டவர்; "ஆண்டவர்" என்பது அவர் பெயராம்.
பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;
ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.
ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது.
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;
ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.
ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;
வாசகத்திற்குப் பின் மன்றாட்டு:
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவா,
நீர் முற்காலத்தில் செய்த அருஞ்செயல்களை
இக்காலத்திலும் தொடர்ந்து ஆற்றிவருகின்றீர் என்பதை நாங்கள் தெளிவாக உணர்கின்றோம்.
உமது வலக்கையின் வல்லமையால் எகிப்தியரின் கொடுமையிலிருந்து இஸ்ராயேல் மக்களை விடுவித்தீர்.
இன்றும் புதுப்பிறப்பளிக்கும் நீரினால் மக்களுக்கு மீட்பு அளிக்கின்றீர்.
இவ்வாறு உலக மாந்தர் அனைவரும் உமது அருளினால் ஆபிரகாமின் உண்மை மக்களாகி,
நீர் தேர்ந்துகொண்ட மக்களுக்குரிய உரிமை வாழ்வை
முழுமையாகப் பெற்றுக்கொள்ளச் செய்வீராக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்
எல். ஆமென்
அல்லது
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவா, புதிய உடன்படிக்கையின் ஒளியில் முற்காலத்தில் நிகழ்ந்த அருஞ்செயல்களைத் தெளிவுபடுத்துகின்றீர்.
எவ்வாறெனில், செங்கடல் திருமுழுக்குத் தண்ணீருக்கு அடையாளமாக அமைந்துள்ளது.
மேலும் அடிமைத் தளையிலிருந்து மீட்படைந்த இஸ்ராயேல் மக்கள்,
தீமை அனைத்தினின்றும் விடுவிக்கப்படும் கிறிஸ்துவ மக்களின் முன்னடையாளமாக விளங்குகின்றனர்.
விசுவாசத்தால் இஸ்ராயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த தனிச்சிறப்பை மக்கள் அனைவரும் பெற்று,
தூய ஆவியில் புதுப்பிறப்பு அடைவார்களாக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
---------------
நான்காம் வாசகம்: புதிய எருசலேம். எசாயா 54:5-14
இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம்
ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; "உலக முழுமைக்கும் கடவுள்" என அவர் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர். எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்;போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன். உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்; ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: திருப்பாடல் 30:2,4 5-6, 11-12
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் உதவி வேண்டினேன்; என்னை நீர் குணப்படுத்துவீர்.
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.
ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
 
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் முன்னோருக்கு நீர் வாக்களித்ததுபோல நீர் தேர்ந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையைப் பெருகச்செய்து,
உமது திருப்பெயர் மகிமையடையச் செய்தருளும்.
இதனால் எங்கள் முன்னோர் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தவையெல்லாம்
எங்களில் நிறைவேறி வருவதை நாங்கள் கண்டுணரச் செய்தருளும்.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
-----------------------
ஐந்தாம் வாசகம்: அனைவருக்கும் மீட்பு இலவசமாக அருளப்படுகிறது: இசை 55:1-11
இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம்
தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: எசாயா 12:2-3, 4, 4-6
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர்செயல்;களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
 
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
உலகத்தின் ஒரே நம்பிக்கை நீரே. இக்காலத்தில் நிறைவேறிக்கொண்டிருக்கும் பாஸ்கா மறைநிகழ்ச்சியை
முற்காலத்திலேயே இறைவாக்கினர் வழியாக முன்னறிவித்திருக்கின்றீர்.
உம்முடைய ஏவுதலால் நாங்கள் இவ்வுலக நிகழ்ச்சிகள் அனைத்தையும்
இறைவாக்கினருக்குரிய மனநிலையோடு சீர்தூக்கிப் பார்க்கவும்
உம் திட்டங்களை உய்த்துணர்ந்து நிறைவேற்றவும் அருள்தாரும்.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
-------------------
ஆறாம் வாசகம்: ஞானத்தின் ஊற்று: பாரூயஅp;க் 3:9-15, 32-38, 4:1-4
பாரூயஅp;க்கு நூலிலிருந்து வாசகம்
இஸ்ரயேலே, வாழ்வுதரும் கட்டளைகளைக் கேள்; செவிசாய்த்து ஞானத்தைக் கற்றுக்கொள். இஸ்ரயேலே, நீ உன் பகைவரின் நாட்டில் இருப்பது ஏன்? வேற்று நாட்டில் நீ முதுமை அடைந்து வருவது ஏன்? இறந்தவர்களொடு உன்னையே தீட்டுப்படுத்திக் கொண்டது ஏன்? பாதாளத்திற்குச் செல்வோருடன் வைத்து நீயும் எண்ணப்படுவது ஏன்? ஞானத்தின் ஊற்றை நீ கைவிட்டாய். கடவுளின் வழியில் நீ நடந்திருந்தால், என்றென்றும் நீ அமைதியில் வாழ்ந்திருப்பாய். அறிவுத்திறன் எங்கே இருக்கிறது, ஆற்றல் எங்கே இருக்கிறது, அறிவுக்கூர்மை எங்கே இருக்கிறது எனக் கற்றுக்கொள். இதனால் நீண்ட ஆயுளும் வாழ்வும் எங்கே உள்ளன, கண்களுக்கு ஒளியும் அமைதியும் எங்கே உள்ளன எனவும் நீ அறிந்து கொள்வாய். ஞானத்தின் உறைவிடத்தைக் கண்டுபிடித்தவர் யார்? அதன் கருவூலங்களுக்குள் நுழைந்தவர் யார்? ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்; தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்; மண்ணுலகை எக்காலத்துக்கும் நிலைநாட்டினார்; அதைக் கால்நடைகளால் நிரப்பினார். அவர் ஒளியை அனுப்பினார்; அதுவும் சென்றது. அதைத் திரும்ப அழைத்தார்; அதுவும் நடுக்கத்துடன் அவருக்குப் பணிந்தது. விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன. அவர் அவற்றை அழைத்தார்; அவை, "இதோ, உள்ளோம்" என்றன; தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின. இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர், மெய்யறிவின் வழி முழுவதும் கண்டவர் இவரே; தம் அடியார் யாக்கோபுக்கும், தாம், அன்புகூர்ந்த மகன் இஸ்ரயேலுக்கும் மெய்யறிவை ஈந்தவரும் இவரே. அதன் பின்னர் ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று; மனிதர் நடுவே குடிகொண்டது. ஞானமே கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்; என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம். அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்; அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர். யாக்கோபே, திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்; அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட, உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே; உன் சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே. இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: திருப்பாடல் 19:7, 8, 9, 10
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
 
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவா, பல்வேறு இனத்தாரை அழைத்துச் சேர்ப்பதால் உமது திருச்சபை எப்பொழுதும் வளரச் செய்கின்றீர்:
திருமுழுக்குத் தண்ணீரில் கழுவப்பெறும் மக்களை ஆதரித்து, இடையறாது காத்தருளத் தயைபுரிவீராக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்
------------------
ஏழாம் வாசகம்: புதிய உள்ளம், புதிய மனப்பாங்கு: எசேக் 36:16-28
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம்
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது; மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். அவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது. எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுகு;குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து "இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று" என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன். நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: திருப்பாடல் 42:3, 5
பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது;
எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே!
ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே!
இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.
பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி,
உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்;
கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.
பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
 
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் குன்றா ஒளியும் ஆற்றலுமாகிய இறiவா,
உமது திருவருட்சாதனமாகிய திருச்சபையைத் தயவாய்க் கண்ணோக்கியருளும்.
உம்முடைய முடிவில்லா ஏற்பாட்டின்படிமனிதரை மீட்கும் அதன் பணிமிகுந்த அமைதியுடன் நிறைவேறச் செய்தருளும்:
அத்திருச்சபை விழுந்தவற்றை எழச் செய்வதாகவும், பழைமையானவற்றைப் புதுப்பிப்பதாகவும்,
கிறிஸ்துவில் தொடங்கியதனைத்தும் அவரிடமே முழமை காணச் செய்வதாகவும் உலகமெல்லாம் கண்டுணர்வதாக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
அல்லது
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவா, பாஸ்கா மறைநிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டுமென்று
பழைய, புதிய ஆகமங்கள் வழியாக அறிவுறுத்துகின்றீர்.
இந்த மறைநிகழ்ச்சிகளைக் கொண்டாடும் நாங்கள் உமது அளவற்ற அன்பைக் கண்டுணரச் செய்தருளும்.
இவ்வாறு உம் அருட்கொடைகளை நாளும் வளமாகப் பெற்று
நாங்கள் மீட்படைவோம் என்னும் நம்பிக்கையில் உறுதிபெறுவோமாக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்
------------------------
பழைய ஏற்பாட்டிலிருந்து இறுதி வாசகமும் அதற்க்குரிய பதிலுரைப்பாடலும் செபமும் முடிந்தபின், பீடத்தில் திரிகள் பற்றவைக்கப்படும் குரு உன்னதங்களிலே என்னும் கீதத்தை தொடங்க, எல்லாரும் தொடர்ந்து பாடுவர். அப்பொழுது அந்தந்த இடத்தின் வழக்கப்படி மணிகள் ஒலிக்கும். கீதம் முடிந்தபின் குரு வழக்கம்போல சபை மன்றாட்டைச் சொல்வார்:


உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே.
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இறைவா, புனிதமிக்க இந்த இரவை எங்கள் ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் மகிமையால் ஒளிபெறச் செய்கின்றீர்.
அவர் சாவின்மீதும் தீமைகள் அனைத்தின்மீதும் அடைந்த வெற்றி விழாவினைக் கொண்டாடக் குழமியிருக்கும் நாங்கள்
சுவிகார மக்களின் உரிமைப் பேற்றினை உணர்ந்து, உள்ளத்திலும் உடலிலும் புதுப்பிக்கப்பெற்று,
உயிர்ப்பின் நம்பிக்கையில் நாளும் வளரச் செய்தருளும்.
உம்மோடு பரிசுத்த ஆவியின் ஜக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும்
உம் திருமகனுமாகிய இயேசு கிறில்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
பின்பு வாசகர் திருமுகத்திலிருந்து வாசிப்பார்
உரோமையர் 6:3-13
அப்போஸ்தலரான புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுதக்திலிருந்து வாசகம்
திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.
இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
அதன்பின் அனைவரும் எழுந்து நிற்க, குரு ஆடம்பரமாக அல்லேலூயா எனப் பாடுவார்; மக்கள் எல்லாரும் அதை எடுத்துப்பாடுவார்கள். பின் சங்கீத முதல்வர் அல்லது ஒரு பாடகர் சங்கீதத்தின் அடிகளைப் பாட, எல்லாரும் அல்லேலூயா எனப் பல்லவி பாடுவர், தேவையானால் சங்கீத முதல்வரே அல்லேலூயா எனத் தொடங்கலாம். நற்செய்திக்கு எரியும் திரிகளைப் பயன்படுத்துவதில்லை. தூபம் காட்டலாம்.



பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;
பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!
நற்செய்தி : மத்தேயு 28:1-10
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
உம்மோடும் இருப்பாராக
புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் - ஆண்டவரே உமக்கு மகிமை
ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர். அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, "நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்றார். அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.
இது கிறிஸ்துவின் நற்செய்தி - கிறிஸ்துவே உம்மை புகழ்கின்றோம்

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

திருவிவிலியம் ஒலி ஒளி - மத்தேயு

அன்பு சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு நாளும் நாம் நமது வருங்கால வாழ்விற்கான பணத்தை சேகரிப்பதற்கு நேரம் செலவிடுகிறோம், நமது பொழுதுபோக்கிற்காக நேரம் செலவிடுகிறோம். ஆனால் நமக்காக பாடுபட்ட, நமக்காக உயிர்விட்ட நமது கடவுளுக்காக என்ன செய்கிறோம். இதோ மத்தேயு எழுதிய திருவிவிலியம் ஒலி ஒளி வடிவில்  உள்ளது. நாம் நமது குழந்தைகளுடன் தினமும் சிறிது நேரம் விவிலியத்தின் வாசகங்களுடன் இந்த ஒலி ஒளி வடிவில்  உள்ள விவிலியத்தை உணர்வுபூர்வமாக விளக்கி அவர்களை தெய்வீக பாதையில் நடத்தி செல்ல முயலுவோம்.

 

புனித வெள்ளி

நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று புனித வெள்ளி. நம் ஆண்டவர் இயேசுவின், பாடுகள், மரணம் ஆகியவற்றை இன்று நாம் நினைவு கூருகின்றோம். இயேசு நமக்காகச் சிலுவைச் சாவை ஏற்று மரணித்த நாள், நாம் வாழ்வுபெற தன் வாழ்வையே கொடுத்த நாள். நமது துரோகத் தனங்களுக்காக அவமானத்தையும், வேதனை களையும், அனுபவித்த நாள். நம் குற்றங்களுக்காகக் காயமடைந்த நாள், நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்ட நாள், நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்ட நாள். பாவத்தின் விளைவு மரணம். அதிலும் இறைமகன் இயேசுவின் பாடுகளும், வேதனைகளும் நிறைந்த சிலுவை மரணம் பாவத்தின் கொடூரத்தை உலகிற்கு பகிரங்கமாய் காட்டுகின்றது. நாமும் நம் பாவங்களுக்காய் இறப்போம். அப்போதுதான் எங்கும் பாவம் வலுவிழந்து வீழ்ந்து போகும். எனவே இறைவனின் வார்த்தையைக் கேட்டு இயேசுவின் பாடுகள், மரணம் இவற்றில் நம் மனம் பதித்து மனமாற்றம் அடைவோம் நம் வாழ்வில் புனிதம் பெறுவோம்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

இன்றைய வாசகம்

அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள். அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.

இன்று புனித வியாழன். இயேசு பணிக்குருத்துவத்தையும், நற்கருணையையும் ஏற்படுத்திய நாள். பிறர் வாழத் தன்னையே இழப்பதுதான் தெய்வீகம் என்பதை மகத்துவமான திருவருட் சாதனங்கள் வழியாக இயேசு நமக்கு உணர்த்துகிறார். பிறர் வாழத் தன்னையே இழப்பதுதான் தெய்வீகம் என்பதை மகத்துவமான திருவருட்சாதனங்கள் வழியாக இயேசு நமக்கு உணர்த்துகிறார். தனது உடலும், இரத்தமும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளக்கப்படும் என்று சொன்னபடியே நிறைவேற்றினார். இதனால் இன்றும் தேவநற்கருணையில் தன்னையே நமக்கெல்லாம் அருள் உயிரூட்டும் உணவாக வழங்கி வருகின்றர். தமது மீட்பின் செயல்களை இன்றும் தம் குருக்கள் வழியாக இயேசு நிறைவேற்றி வருகின்றார். குருத்துவம் இறைவன் நமக்குத் தந்த மகத்துவம். 
 

புதன், 16 ஏப்ரல், 2014

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

திங்கள், 14 ஏப்ரல், 2014

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

ஞாயிறு நற்சிந்தனை

இறைத்திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். இன்று குருத்தோலை ஞாயிறு. இறை இயேசுவின் தூய பெயரில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நாற்பது நாள் தவத்தின் செயல்களில் ஈடுபட்டிருந்த நாம் இன்று புனித வாரத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். புனித வாரத்தின் தொடக்கமாகவும், நுழைவு வாயிலாகவும் குருத்து ஞாயிறு அமைகின்றது. தாவீதின் மகனுக்கு ஓசான்னா முழக்ககங்களோடும், ஒலிவ கிளைகளை கைகளிலே ஏந்திய வண்ணமாய் எபிரேயர் எருசலேமிற்குள் வீரப்பயணம் மேற்கொள்கிறார்கள்.