வெள்ளி, 31 ஜனவரி, 2014

இன்றைய வாசகம்.


முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 5-10,13-17 

வியாழன், 30 ஜனவரி, 2014

புனித அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .



  புனித அந்தோனியாரின் வாழ்க்கை வரலாறு .


     குறிப்பு 
    இயற்பெயர்       : பெர்தினாந்து    
    பிறப்பு                  :  1195
     ஆகுஸ்தினார் சபை :  1210
     பிரான்சிஸ்கன் சபை: 1220
     இறப்பு            :   13.ஜூன் 1231
      புனிதர் பட்டம்      : 1232
           
  பிரான்சிஸ்கன் சபை துறவி, திருச்சபை இன் வேத போதகர்., கோடி அற்புதர், பதுவை புனிதர்....

இன்றைய வாசகம்

முதல் வாசகம்
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8 

புதன், 29 ஜனவரி, 2014

செவ்வாய், 28 ஜனவரி, 2014

திங்கள், 27 ஜனவரி, 2014

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ஞாயிறு நற்சிந்தனை


திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் என் இனிய சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி ஆண்டவரின் அருள்பெற அணிதிரளும் உங்கள் அனைவருக்காகவும் பணிவுடன் இறைவனை வேண்டி நிற்கின்றேன். ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் வாரத்திலிருக்கும் நாம் இறைவன் முன் உலகோர்முன் புதிய படைப்புக்களாக நிற்க வழிகாட்டப்படுகிறோம்.

இன்றைய ஞாயிறு நற்செய்தி, நாம் கடவுளிடம் முழுவதுமாக சரணடையவேண்டும் என நம்மை அழைக்கிறது. புனித அந்திரேயா போல நாமும் இயேசுவோடு தங்குவோம். அவரது வலிமை பெறுவோம். பெரு மகிழ்வோடு வாழ்வோம். பிறரும் அந்த மகிழ்வைப் பெற, அவர்களுடன் பேசி இயேசுவை எடுத்துச் சொல்லி அவரிடம் அழைத்து வருவோம். மகிழ்வைப் பெருக்குவோம்.


சனி, 25 ஜனவரி, 2014

வியாழன், 23 ஜனவரி, 2014

புதன், 22 ஜனவரி, 2014

செவ்வாய், 21 ஜனவரி, 2014

திங்கள், 20 ஜனவரி, 2014

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

ஞாயிறு நற்சிந்தனை

இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு. நம் பக்கம் சாய்ந்து நமது மன்றாட்டைக் கேட்டருளும் நம் ஆண்டவர் இயேசுவின் சந்நிதானத்தில் பலி செலுத்த ஒன்று கூடியுள்ளோம். உலகம் முழுவதும் அவருடைய மீட்பை அடைவதற்கு நம்மைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன் எனக் கூறுவதன் மூலம் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள நம்மிடம், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையடும் பொறுப்பை ஒப்படைக்கின்றார். பலியையும் காணிக்கையையும் அவர் விரும்பவில்லை: எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் அவர் கேட்கவில்லை: நம்முடைய தூய்மையான வாழ்வையும், பணி வாழ்வையுமே அவர் விரும்புகின்றார்.

சனி, 18 ஜனவரி, 2014

உணவு திருவிழா




ஜனவரி 17 ஆம் தேதி நமது ஆலயத்தில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் நமது உறுப்பினர்களின் பங்கு  சிறப்பாக இருந்தது. இந்த விழாவில் குறிப்பாக குடும்ப தலைவிகளின் சிறப்பான பங்கேற்பிற்கு நமது செயற்குழுவின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். விழாவின் சில முக்கிய காட்சிகளை காணலாம்.

இன்றைய வாசகம்

ஜனவரி 18, சனிக்கிழமை

முதல் வாசகம்

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஞாயிறு நற்சிந்தனை


 ஞாயிறு நற்சிந்தனை


ஜனவரி 12, ஞாயிறு நற்சிந்தனை
என் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் என் கனிவான வாழ்த்தை உரியதாக்குகிறேன். கிறீஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்த நாம், இன்று நம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாட இறைவனின் திருப்பாதத்தில் ஒன்று கூடியிருக்கின்றோம். இன்றைய நாளில் இயேசுவினுடைய தாழ்ச்சி, பொறுமை, இறைவனிடமிருந்து வந்த அழைப்பை முழுமையாக ஏற்று வாழும் நல்லுள்ளம், பணியார்வம், என்பவற்றையும்: இயேசு இறைமகன் என்பது வெளிப்படுத்தப்படுவதையும், தூய ஆவியார் அவர்மீது இறங்கி வருவதையும் இறைவார்த்தைகள் எடுத்தியம்பி நிற்கின்றன.

சனி, 11 ஜனவரி, 2014

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

ஞாயிறு நற்சிந்தனை

ஜனவரி 5, ஞாயிறு நற்சிந்தனை 

இறைமகன் இயேசுவில் அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, இன்று அன்னையாம் திருச்சபை ஆண்டவரின் திருக்காட்சி விழாவினைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஆகவே, அனைவருக்கும் திருக்க்காட்சிப் பெருவிழாவின் வாழ்த்துக்களைக்கூறி மகிழ்கிறேன்.

புதன், 1 ஜனவரி, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்


 இராசல்கைமா புனித அந்தோனியார் ஆலய தமிழ் கத்தோலிக்க குழு செயற்குழு உறுப்பினர்கள் குழுவின்  உறுப்பினர்கள் மற்றும் அனைவரின் குடும்பத்தினர்களுக்கும்  நண்பர்களுக்கும் மனமுவந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.