எம்மைப்பற்றி

அறிமுகம்




     






                                                                                                                                                                                                                                                                                                                    

அன்புள்ள நண்பர்களே இராசல்கைமா புனித அந்தோணியார் ஆலயத்தில் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஷர்ஜா அதிதூதர் மிகைல் ஆலய பங்கு தந்தை அருட்திரு ஆனி சேவியர் O.F.M. Cap  மற்றும் இராசல்கைமா புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை அருட்திரு. தாமஸ் அம்பாட்டுகுழி O.F.M. Cap ஆகியோரின் ஒத்துழைப்புடன் திரு.அ. பென்சிகர் அவர்களின் முயற்சியால்  உருவானது இராசல்கைமா தமிழ் கத்தோலிக்க குழு.
                  ஷர்ஜா அதிதூதர் மிகைல் ஆலய பங்கு தந்தை அருட்திரு ஆனி சேவியர் அவர்கள் தங்களுடைய வேலைப்பளுவையும் நீண்ட தூர பயணத்தையும் பொருட்படுத்தாமல் 2004 முதல் கடந்த பத்து ஆண்டுகளாய் இராசல்கைமா பக்தர்களுக்காக திருப்பலி ஆற்றியும்  இராசல்கைமா ஆலயத்தில் தமிழ் அருட்தந்தையர்கள் இல்லாததால் இராசல்கைமா தமிழ் பக்தர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவந்தார். அவருடைய உதவி அளப்பிட இயலாதது.
               அதுபோல் இராசல்கைமா ஆலயத்தில் தமிழ் அருட்தந்தையர்கள் இல்லாததால் இராசல்கைமா தமிழ் பக்தர்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக புஜைரா இடைவிடா சகாய மாதா ஆலய பங்கு தந்தை அருட்திரு. பேட்ரிக் ஜோஜி S.D.B, மற்றும் புஜைரா தூய மரியன்னை கத்தோலிக்க பள்ளியை சேர்ந்த தந்தையர்கள் அருட்திரு. அருள் சேகர் S.D.B  மற்றும் அருட்திரு ஜான் S.D.B ஆகியோரின் அருட்பணி மிகவும் உயரியது.
              அதுபோல  ஷர்ஜா அதிதூதர் மிகைல் ஆலய பங்கை  சார்ந்த   திரு. எட்வின் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் தமிழ் பாடல் குழுவின் பங்கு மிகவும் சிறப்பானது. அவர்கள் தங்களுடைய அன்றாட அலுவலகப் பணியுடன் தங்கள் பங்கிற்காகவும் நமது பங்கிற்காகவும் சிறப்பான உதவி செய்து வருகிறார்கள். அத்துடன் விழா நேரத்தில்   நீண்ட தூர பயணத்தையும் பொருட்படுத்தாமல் தினமும் வந்து நமது ஆலய பாடகர்களுக்கு பயிற்சியும் கொடுத்துவந்தார்கள்.
             தமிழ் கத்தோலிக்க குழு. திரு. பால், திரு. ஜெகதீஷ், திரு. இக்னேசியஸ், திரு. வினோத், திரு.பெலிக்ஸ், திரு.அலெக்ஸ்,திரு.பென்சிகர், திரு. ஜெரோம், திரு. குமார், திரு. தாஸ் மற்றும் திரு.ஜோசெப் ஆகியோர் துவக்க குழு உறுப்பினர்களாக இருந்து 2011 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். அதன்பிறகு பக்தி முயற்சிகளிலும் ஆலய செயல்பாடுகளிலும் துணையாக இருந்து வந்தார்கள். 2012 ஆம் ஆண்டு  குழுவின் உறுப்பினர்கள் இருமடங்காக பெருகி 2012 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். இன்று இந்த குழு நல்ல ஒரு பக்தி இயக்கமாக இருந்து ஆலயத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் தங்களது  செய்துவருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த தளம் குழுவின் செயல்பாடுகளையும் உறுப்பினர்களின் சிந்தனைகள் படைப்பாற்றல் போன்றவற்றை  வெளிப்படுத்த உதவும் என்று நம்புகிறோம். இயேசுவுக்கே புகழ், மரியே வாழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக