ஞாயிறு, 23 மார்ச், 2014

பாதுகாவல் புனிதர்கள்

கத்தோலிக்கத் திருச்சபையில் தூய்மையான வாழ்வும், தியாக உள்ளமும், அர்ப்பணிப்பும் தன்னகத்தே கொண்டு கற்பு நெறியுடன் வாழ்ந்து, சோதனைகளிலும், துன்பவேளைகளிலும் தளராத இறைனம்பிக்கையுடன் திகழ்ந்தவர்களைத்தான் திருச்சபை புனிதர்களாக உயர்த்துகிறது. இறைவனோடு ஒன்றித்திருக்கும் அப்புனிதர்களிடம் நாம் விசுவாச பிரமாணத்தின்படி நமது தேவைகளுக்காக இறைவனிடம் பரிந்துரைக்கச் சொல்லி செபிக்க வேண்டும். அவ்வாறு செபிக்க உதவியாக பாதுகாவலர்களாக உள்ள புனிதர்களின் குறிப்பும், அவர்கள் எதற்க்கெல்லாம் பாதுகாவலர்களாக உள்ளனர் என்பதையும் சுருக்கமாக சொல்லிடுருக்கிறேன். மேலும் அந்தந்த புனிதர்களின் திருவிழா நாட்களையும்.அவர்கள் வாழ்ந்த காலத்தையும் குறிப்பிட்டுள்ளேன். செபிப்போம் ! செழிப்போம் !!

புனித யூவ்ஸ் ( St. Yves )


புனித யூவ்ஸ். இவர் சட்ட நிபுனர்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவு மற்றும் திருவிழா நாள் மே மாதம் 19 ம் தேதி. இவர் இயேசுவுக்காக வாழ்ந்து,  கி.பி.1303 ம் ஆண்டு மறைந்தார்.

புனித விதுஸ் ( St. Vitus )


புனித விதுஸ். இவர் நடனக் கலைஞர்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவு மற்றும் திருவிழா நாள் ஜூன் மாதம் 15 ம் தேதி. இவர் இயேசுவுக்காக வாழ்ந்து,  கி.பி.303 ம் ஆண்டு கொதிக்கும் எண்ணையில் வேகவைக்கப்பட்டு வேதசாட்சியாக கொல்லப்பட்டார்.

புனித ரோச் ( St. Roch )



புனித ரோச். இவர் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கான பாதுகாவலர். குறிப்பாக நாய்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவு மற்றும் திருவிழா நாள் ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி. இவர் இயேசுவுக்காக வாழ்ந்து, சிறை வாழ்வையேற்று, சிறையிலேயே கி.பி.1327 ம் ஆண்டு மறைந்தார்.

புனித ஆசிவாதப்பர் ( St. Benedict )


புனித பெனடிக்ட் அல்லது புனித ஆசிவாதப்பர் சிறுநீரகங்களுக்கான மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான பாதுகாவலர். இவரது நினைவு நாள் மற்றும் திருவிழா மார்ச் மாதம் 21 ம் தேதி. இவர் கி.பி.543 ம் ஆண்டு மறைந்தார்.

புனித சின்னப்பர் ( St. Paul )


புனித சின்னப்பர். புற இனத்தவர்க்கான அப்போஸ்தலர். எழுத்தாளர்களுக்கான பாதுகாவலர். இவரதி நினைவுத் திருவிழா ஜூன் மாதம் 29-ம் தேதி. புனித சின்னப்பர் சின்ன ஆசியாவில் உள்ள தார்கஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை உரோமை குடிமகன். புனித சின்னப்பரின் பழைய பெயர் சவுல். பரிசேயரின் கொள்கைகளை ஆர்வத்துடன் பின்பற்றி வந்தார். கூடாரம் அமைக்கும் தொழிலையும் இவர் கற்றிருந்தார். புதுமையாக இவர் மனம்திரும்பினார். இயேசுகிறிஸ்துவை புறவினத்தாருக்கு அறிவிக்கும்படி இவர் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டார். பல ஆண்டுகள் நீண்ட பயணம் மேற்கொண்டு, கடுமையாக உழைத்தார். பல்வேறு இன்னல்கள் இயேசுவுக்காக அனுபவித்தார். பின்னர் உரோமையை அடைந்து, புனித பேதுரு இராயப்பருடன் இணைந்து திருச்சபையை நிறுவினார். உரோமை அரசால் கைது செய்யப்பட்டு, மரண தண்டணை விதிக்கப்பட்டார். இவர் உரோமை குடிமனாக இருந்த காரணத்தினால், சிலுவையில் அறைந்து கொல்லாமல், கி.பி.64-ம் ஆண்டு  இவரை தலையை வெட்டிக்கொன்றார்கள்.

புனித பத்ரீசியார் ( St. Patrick )


புனித பத்ரீசியார். அயர்லாந்து நாட்டிற்க்கான பாதுகாவலர். மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களுக்கும் பாதுகாவலர். புனித பத்ரீசியார் தன் 16 ம் வயதில் அயர்லாந்து நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார். அவிசுவாசியான ஒருவரிடம் கால்நடை மேய்த்தார். பின்னர் தப்பித்து ஐரோப்பா சென்று, அயர்லாந்தின் அப்போஸ்தலராகும்படி தம்மை தயாரித்தார். முதலாம் செலஸ்தீன் பாப்பிறை இவரை ஆயராக்கி, அயர்லாந்து மக்கள் மனம்திரும்ப இவரை அங்கே அனுப்பினார். அயர்லாந்து அரசன் தன் வீரர்களை அனுப்பி புனித பத்ரீசியாரையும், அவரது தோழர்களையும் கைது செய்தான். இயேசுவின் உயிர்ப்பு விழாவன்று அரசன் முன்னிலையில் புனித பத்ரீசியார் இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அழகாக எடுத்துரைத்தார். ஒரே கடவுள் மூன்று ஆட்களாயிருக்கிறார் என்பதை அரசனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அப்பொழுது புனித பத்ரீசியார் ஒரு சிறு செடியை பிடுங்கி காண்பித்து, 'ஒரு தண்டில் மூன்று இலைகள் இருக்கின்றன. மூன்று தேவ ஆட்கள் ஒரே கடவுளாக இருக்கமுடியாதா?' என்றார். இவ்விளக்கத்தை கேட்ட மக்களும், மன்னனும், மனம்திரும்பினார்கள். இவரது நினைவுத் திருவிழா மார்ச் மாதம் 17-ம் தேதி. இவர் கி.பி.464-ம் ஆண்டு மறைந்தார்.

புனித பங்ராஸ் ( St. Pancras )


புனித பங்ராஸ். இவர் குழந்தைகளுக்கான பாதுகாவலர். பிரீஜியா நாட்டு பிரபுக் குலத்தில் பிறந்தவர். தன் 14-ம் வயதில் இவர் உரோமைக்கு வந்தார். இவரை கைது செய்து அதிகாரியின் முன் நிறுத்தினார்கள். பொய் தேவதைகளுக்கு இவர் பலிகள் செலுத்த மறுத்ததால் கிறித்தவமறைக்காக கி.பி.304-ம் ஆண்டு  மறைசாட்சியாக கொல்லப்பட்டார். இவரது நினைவுத் திருநாள் மே மாதம் 12-ம் தேதி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக