இறை இயேசுவில் அன்புநிறை சகோதரர்களே சகோதரிகளே! உங்கள்
அனைவருக்கும் இயேசுவின் பெயரில் என் அன்பையும் வாழ்த்தையும்
உரித்தாக்குகிறேன்.
மீண்டும் ஒரு புதிய மாதத்தில் நம்மை தொடர்ந்து வழிநடத்தும் இறைவனைப்போற்றி
நம் நன்றியை அவருக்கு சமர்ப்பிப்போம்.
ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் வாரத்திலிருக்கும் நாம், மாசி மாதம் 2 ஆம்
திகதி மனுக்குலத்தின் மீட்பராகப்
பிறந்த இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை நாம்
நினைவுகூருகின்றோம்.
இயேசு எருசலேம் தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படும் போது அவர் யார் என்பது சிமியோனுக்கும், அன்னாளுக்கும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்டவர் நல்மனத்தோடு தன்னைத் தேடுபவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகிறார். நல்மனத்தோடு ஆண்டவரைத் தேடுகிறவர்கள் அவரைக் கண்டுகொள்கிறார்கள். வாழ்க்கை நிகழ்வுகளில் அவரைச் சந்திக்கிறார்கள். சுயநலம் கொண்டவர்களாக, அடுத்திருப்பவர்களை அன்பு செய்ய மனமில்லாதவர்களாக வாழ்பவர்களுக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவதில்லை. ஆகவே நல்மனம் கொண்டவர்களாக ஆண்டவரைத் தேடுவோம். அவரைக் கண்டுகொள்வோம்.
முதலாம் வாசகம் மலாக்கி .3:1-4 கடவுளாகிய ஆண்டவர் கூறுவது "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்" என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.
இயேசு எருசலேம் தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படும் போது அவர் யார் என்பது சிமியோனுக்கும், அன்னாளுக்கும் வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்டவர் நல்மனத்தோடு தன்னைத் தேடுபவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகிறார். நல்மனத்தோடு ஆண்டவரைத் தேடுகிறவர்கள் அவரைக் கண்டுகொள்கிறார்கள். வாழ்க்கை நிகழ்வுகளில் அவரைச் சந்திக்கிறார்கள். சுயநலம் கொண்டவர்களாக, அடுத்திருப்பவர்களை அன்பு செய்ய மனமில்லாதவர்களாக வாழ்பவர்களுக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவதில்லை. ஆகவே நல்மனம் கொண்டவர்களாக ஆண்டவரைத் தேடுவோம். அவரைக் கண்டுகொள்வோம்.
முதல் வாசகம்
யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.முதலாம் வாசகம் மலாக்கி .3:1-4 கடவுளாகிய ஆண்டவர் கூறுவது "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்" என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக