நாம் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் நம்மில் குடியிருக்கிறார் என்றும் நமக்கு நினைவூட்டும் இன்றைய இறைவார்த்தைகள்:
நம்மைத் தூயோராய் இருங்கள் என்றும். உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே என்றும்,
பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே என்றும்.
உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! என்றும் மிகவும் அழுத்தமாகக் கூறி நிற்கின்றன.
எனவே நம் குற்றங்களையெல்லாம் மன்னித்து: நம் நோய்களையெல்லாம் குணமாக்கி,
நம் உயிரைப் படுகுழியினின்று மீட்டு: நமக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டும் நம் இறைவன் சொல்லும்
இவ் வார்த்தைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறைவனின் சாட்சிகளாய் வாழ வரம் கேட்பதோடு
அமைதியின் வாழ்த்தை இதயத்தில் சுமந்து சென்று உறவுகளை உறுதிப்படுத்துவோம். உறுதியோடு நாம் செயற்பட வல்லமை கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக!
என் உடன்படிக்கையை நீ மீறினதால், உன் அரசைக் கூறு கூறாக்குவோம். தாவீதின் பொருட்டு ஒரு கோத்திரத்தை உன் மகனுக்கு அளிப்போம்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 11: 4-13
வாழ்வை நிறைவாக அளிக்கும் வல்லவராம் இறைவன்,
தனது ஆசீர்வாதங்களை முழுமையாகப் பெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை
இன்றைய வார்த்தைகள் வழியாக மிகவும் தெளிவாகக் கூறுகின்றார்.
அதாவது: பசித்தோர்க்கு நமது உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா
வறியோரை நமது இல்லத்திற்கு அழைத்து வருவதும்,
உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்,
சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும்
நிறுத்திவிட்டு,
பசித்திருப்போருக்காக நம்மையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு
செய்வதும் நமக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தரும் என்பதே இறைவனுடைய அறிவுரை
எனவே நாம் ஒவ்வொருவரும் நம்மிடையே இருக்கும் தீமையை அகற்றிவிட்டு,
சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும்
நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக நம்மையே கையளித்து,
வறியோரின் தேவையை நிறைவு செய்து: மண்ணுலகிற்கு உப்பாகவும், உலகிற்கு
ஒளியாகவும் மாற வரம் கேட்போம்.
இறை இயேசுவில் அன்புநிறை சகோதரர்களே சகோதரிகளே! உங்கள்
அனைவருக்கும் இயேசுவின் பெயரில் என் அன்பையும் வாழ்த்தையும்
உரித்தாக்குகிறேன்.
மீண்டும் ஒரு புதிய மாதத்தில் நம்மை தொடர்ந்து வழிநடத்தும் இறைவனைப்போற்றி
நம் நன்றியை அவருக்கு சமர்ப்பிப்போம்.
ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் வாரத்திலிருக்கும் நாம், மாசி மாதம் 2 ஆம்
திகதி மனுக்குலத்தின் மீட்பராகப்
பிறந்த இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை நாம்
நினைவுகூருகின்றோம்.